சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் கீழ் குறைந்துள்ளது.
அதாவது, 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 39 ஆயிரத்து 221ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 368 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,946 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,894 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 69 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 303 பேருக்கும், கோவையில் 231 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், திருப்பூரில் 69 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், ஈரோட்டில் 82 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.