வகுப்புவாத வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : மக்களிடம் சோனியா காந்தி, ஸ்டாலின் உட்பட 13 கட்சி தலைவர்கள் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 9:36 pm

நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெறுப்பு கருத்துக்கள் குறித்த பிரதமரின் அனுமதி அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள், கருத்துக்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது.

வெறுப்பு பேச்சுக்களை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறைகளை கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் பிரித்தாளும் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

  • Vaadivaasal Movie Latest News களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!