தமிழகம் முழுவதும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு
Author: Sudha16 July 2024, 3:34 pm
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
புதிய தமிழக புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் உணவுத்துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை மாநகராட்சியின் உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக வீரராகவ ராவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிட்கோ இயக்குனராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ராமநாதபுரம் ராணிப்பேட்டை அரியலூர் நீலகிரி கடலூர் உள்ளிட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆனி மேரி ஸ்வர்ணா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மாற்றம் செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன் வித் சிங் கலோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தஞ்சை மாவட்ட ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
0
0