தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்? தேர்தல் கணக்கு போடும் திமுக : இன்னும் பலர் மாற வாய்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 4:45 pm

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை திமுக அரசு அதிரடியாக மாற்றி உள்ளது. இது தேர்தலை குறி வைத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும், இன்னும் பலர் மாற்றப்பட உள்ளதாகவும் முத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.

திமுக பொறுப்பேற்று மூன்றறை ஆண்டுகள் முடியும் நிலையில் உள்ளது. ஆனால் திமுக அரசு எதுவும் சொல்லும் படியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் மேலோங்கி உள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 99% நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் மார்தட்டி பேசுகிறார்.

ஆனால் எதுவும் நிறைவேற்றவில்லை மின்கட்டண கணக்கெடுப்பு ஒரு மாதத்துக்கு ஒரு முறை நடக்கும் என்றார்கள் நடந்ததா. மின் கட்டணத்தை குறைப்போம் என்றார்கள் குறைந்ததா.

சொத்து வரியை உயர்த்தினார்கள் என எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைக்கின்றார்கள். இதே போல பல கோரிக்கைகள் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்தது.

ஆனால் நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு இன்று பொதுமக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் மேலோங்கி இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வரவுள்ளது.

ஆனால் ஓராண்டு தான் முழுமையாக உள்ளது. இந்த ஆண்டு முடிந்து மே மாதம் வந்த உடனே தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் துவங்கிவிடும் என அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை இழுத்து பலருக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளும் தயார் நிலையில் உள்ளன. 50000 பணியிடங்களுக்கு உடனடியாக வேலை ஆணைகளை அரசு வழங்க உள்ளது.

இதன் மூலம் 40 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு திமுக திட்டம் தீட்டு உள்ளது. ஏற்கனவே கல்லூரி மாணவிகளுக்கு வழங்குவது போல ஆயிரம் ரூபாய் கல்லூரியில் மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய உத்வேகத்துடன் செயல்பட அமைச்சரவை மாற்றம் துணை முதல்வர் அறிவிப்பு என அடுக்கடுக்கான நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கி உள்ளது. இதில் மற்றொரு பகுதியாக தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
*வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சமூக நல ஆணையராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடைய செயல்பாடுகள், கடந்த ஆண்டுகள் அவர்களுடைய பிராகரஸ் ரிப்போர்ட் ஆகியவை அரசு கணக்கிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை நீக்குவதற்கு அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: திமுக அரசு தேர்தல் பணியை தற்போதைய துவக்கி உள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பணி தொடர்ந்து நடக்கும் என தெரிகிறது. இன்னும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படலாம். கட்சி நிர்வாகிகளையும் திமுக அரசு உஷார் படுத்தி வருகிறது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அரசின் திட்டங்களின் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். என்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 164

    0

    0