17 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது.. முன்னாள் துணை முதலமைச்சருக்கு ஜாமீன்..!!!
Author: Udayachandran RadhaKrishnan9 ஆகஸ்ட் 2024, 2:33 மணி
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.
இதனால் அவர் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
விசாரணையை தொடர்ந்து மனிஷ் சிசோடியாவிற்கு நிபந்தணைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி மணிஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அமலாக்கத்துறை சார்பில் மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று முன்வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
0
0