சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி: கள்ளக்காதல் பிரச்சினையா? படுக்கையறைக்குள் சிலிண்டர் வந்தது எப்படி….!!

Author: Sudha
17 August 2024, 2:56 pm

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு எப்படி வந்தது? என போலீசார் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ரமாதேவி வேறொருவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது எப்படி என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!