கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: மாணவர்களின் தொடர் போராட்டத்தால் 2 பேராசிரியர்கள் கைது..!!

Author: Rajesh
13 March 2022, 11:01 am

தென்காசி: பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பேராசிரியர்களை கைது செய்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனோ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்காசி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முதலாண்டு படித்து வருகிறார். பிரியாவிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் அவர் தனது தோழியின் செல்போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட கல்லூரி பேராசிரியை மற்றும் பேராசிரிசிரியர் இருவரும் மாணவி பிரியாவை கண்டித்ததுடன் இதுகுறித்து மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு கூறி உள்ளனர். மாணவி எவ்வளவோ மறுத்தும் பேராசிரியர்கள் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

அவரை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்குமாறு தொடர்ந்து பேராசிரியர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர் . மாலை வீட்டிற்கு வந்த மாணவி பிரியா மறுநாள் கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு கல்லூரி ஆசிரியரும் ஆசிரியையுமே காரணம் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வந்தனர்.

இந்நிலையில் தென்காசி அருகில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சபேராசிரியர் வளர்மதி, முத்துமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராசிரியர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்திவந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1479

    0

    0