+2 மாணவன் இறப்பில் திடீர் திருப்பம்… போதை ஊசி போட்டதால் மரணம்? சுடுகாட்டில் உடலை தோண்டி எடுத்த போலீசார்!!!

சேலம் தாதகாப்பட்டி வேலூர் புது தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவரது மனைவி செல்வி இவரது மகன் கிரி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவன் உடலை மணினுர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் போதை ஊசி போட்டுக் கொண்டதால் மாணவன் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

அதன் பெயரில் உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவனின் பெற்றோர் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை மாணிக்கம் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை தோண்டி எடுத்து பெய்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று உதவி ஆணையாளர் அசோகன் காவல் ஆய்வாளர் சந்திரகலா கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சுடுகாட்டுக்குச் சென்று இன்று உடலை தோண்டி மாணவன் உடலை எடுத்து பெய்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறும் போது மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா இல்லை முன்விரோத காரணமா என எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் எனவும் மாணவனுக்கு மாநகருக்கு போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருப்பதாகவும் தகவல் உள்ளது.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் எனவும் தெரிவித்தார் மேலும் மாணவன் கிரி மீது கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக உதவி ஆணையாளர் அசோகன் தெரிவித்தார்

சேலம் மாநகரில் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது குறிப்பாக சில நாயக்கன்பட்டி பகுதி முழுவதும் போதை மாத்திரை ஊசி உள்ளிட்டவைகள் மருந்து கடைகளில் அதிக அளவில் விற்கப்படுகிறது இது குறித்து காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

14 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

15 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

17 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

19 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

19 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

20 hours ago

This website uses cookies.