ரூ.2000 நோட்டு விவகாரம்… ‘ஒற்றைத் தந்திரம்’ என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின் ; உடனே செக் வைத்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 11:52 am

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து டுவிட் போட்டுள்ளார். அதாவது, 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் ட்விட்டர் பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம்! என்று பதிவிட்டுள்ளார்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!