2019க்கு அப்பறம் இப்போ.. G SQUARE ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 9:51 pm

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்து காவலர்களுக்கு மின்மிதி வண்டிகளை வழங்கி நிகழ்வை கொடியசைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மேலும் சீரமைத்து விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்களும் சிறைவாசிகளுக்கு இசைக்கருவிகளை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.

பின்னர் கைப்பந்து விளையாட்டு போட்டியை விளையாடி துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் சிறை நூலகத்தை சிறை துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நீண்ட ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க சிறையில் மனுக்கள் அளித்துள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே முதல் முறை நிராகரித்து விட்டார் இரண்டாவது முறையாக ஆளுநர் வசம் தற்போது கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.

பின்னர் ஐடி ரெய்டு பற்றி பேசிய அவர் வருமான வரித்துறையினர் 2019 ஆம் ஆண்டு சோதனை நடத்தினார்கள். தற்போதும் நடத்துகின்றனர். சோதனை முடியட்டும் பார்க்கலாம். குற்றசாட்டுகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பதில் சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்..

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!