இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம் ; நீட் ரத்து குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு

Author: Babu Lakshmanan
9 January 2023, 8:39 am

இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை மணிக்கு கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் தொடங்குகிறது. இதற்காக காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பும் அவரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர்.

அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்குக்குள் வரும் கவர்னர் தனது உரையை வாசிப்பார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார். தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!