கல்லூரி சேர்ந்து 15 நாள்: 22 வயதில் மாரடைப்பு: எந்த கெட்ட பழக்கமும் இல்லை: ஆனாலும் மரணம்….!!

Author: Sudha
19 August 2024, 10:51 am

இன்றை தலைமுறை இளைஞர்கள் படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூரில் தங்கி 3 வேலையும் கடை சாப்பாடு சாப்பிட்டு வரும் நிலையில், அவர்களை குறிப்பிட்டு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.இன்றைய தலைமுறையினர் 3 வேலையும் வெளியில்தான் சாப்பிடுகின்றனர் எச்சரிக்கையுடன் இருங்கள்” என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கல்லூரி நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க அவுட்டிங் வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 15 நாள்களுக்கு முன் எம்.பி.ஏ பிரிவில் சேர்ந்திருக்கிறார் 22 வயது இளைஞர் சுகைல்.

கல்லூரி விடுதியிலே தங்கி பயின்று வந்த சுகைல், சம்பவத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் ஒன்றில்… தன் தோழிகளுடன் சென்று நடனமாடியதாக கூறப்படும் நிலையில், அங்குதான் விபரீதம் அரங்கேறி இருக்கிறது.மீண்டும் நடனமாடியபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞர் மரணமடைந்தார்.

தோழிகளுடன் நடனமாடி கொண்டிருந்த சுகைல், நடனத்திற்கு நடுவே பப்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு பின்னர் மீண்டும் நடனமாடிய நிலையில்… திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்ததாக சொல்லப்பட்டது.

செய்வதறியாத தவித்த நண்பர்கள், சுகைலை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

என்ன ஆனது ?, எதனால் உயிரிழந்தார்? என நண்பர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது…

உறவினர், ஒருவர் கூறுகையில் சுகைல் சம்பவத்தன்று பப்பில் சாப்பிடவே இல்லை எனவும், 5 வேளையும் தவறாமல் தொழுகை செய்து ஒழுக்கத்துடன் வளர்ந்து வந்த அவரின் இந்த திடீர் மரணம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மனம் கலங்கினார்…

மேலும் உடல் நிலை மோசமாகும் அளவுக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை”என தெரிவித்தனர்.போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1046

    0

    0