மீண்டும் தாண்டவமாடும் தங்கம் விலை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!
Author: Sudha2 August 2024, 11:26 am
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி காணப்படுகிறது அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,460 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5292 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 91.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.