ஹோட்டலில் ஆண் நண்பருடன் உல்லாசம்.. உடலுறவுக்கு பின் உயிரிழந்த இளம்பெண் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2024, 5:01 pm

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்ணின் உயிர் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது காதலனுடன் நர்சிங் பட்டதாரி பெண் தங்கியுள்ளார்.

இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடலுறவின் போது இளம்பெண்ணுக்க அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றத்தில் காதலன், ஆன்லைனில் அது குறித்து தேடியுள்ளார்.

ஆன்லைனில் தகவல் தேடியே நேரத்தை கடத்தியுள்ளார். ஆனால் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்ட அந்த பெண் மயக்கடைந்துள்ளார்.

இதையும் படியுங்க: சாவு வீட்டில் வீரலட்சுமி கணவர் மீது சரமாரி தாக்குதல்… மண்டை உடைந்து 25 தையல்..!!

இதையடுத்து தனது நண்பனை போன் செய்து வர வைத்த காதலன், பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு பெண்ணுக்கு முதலுதவி செய்த பின், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாலயே மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறினர்.

இதனிடையே பெண் மரணத்திற்கு காரணமான காதலனை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வருவதற்குள் பெண் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த செப்.,23ம் தேதி நடந்துள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 333

    0

    0