விஸ்வரூபம் எடுக்கும் 2ஜி வழக்கு… நாளை வெளியாகும் தீர்ப்பு தேதி : அதிர்ச்சியில் கனிமொழி, ஆ. ராசா!!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2023, 11:19 am
விஸ்வரூபம் எடுக்கும் 2ஜி வழக்கு… நாளை வெளியாகும் தீர்ப்பு தேதி : அதிர்ச்சியில் கனிமொழி, ஆ. ராசா!!!
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்ட்டது. இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கில் 2011-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 17 கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக 2018-ம் ஆண்டுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.
இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் தினசரி விசாரணையும் நடைபெற்று வந்தது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை அக்டோபர் 30-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.