பாஜகவை எதிர்த்து போட்டியிட மேலும் ஒரு தலைவர் மறுப்பு… பரிதவிப்பில் காங்கிரஸ்… பொதுவேட்பாளரை தேடி அலையும் எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 4:29 pm

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மேலும் ஒரு தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தாலும், அபாரமான அரசியல் நகர்த்தல்களாலும் தேசிய அளவில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தேசிய அளவில் 2வது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது பாஜகவை தோற்கடிக்கும் திறன் இல்லை. எனவே, 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்டது.

modi-amith-shah-updatenews360

இந்த சூழலில், எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தால் மட்டும் பாஜகவை நெருங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, பாஜக ஆளாத மாநில தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

Mamata 5 Lakhs - Updatenews360

அதேவேளையில், கட்சியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருந்து வருகிறது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதை தற்போது காங்கிரசும் நம்பத் தொடங்கி விட்டது.

இதனிடையே, வரும் ஜுலை 18ம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த முடிவாக உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவார் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தன. ஆனால், பாஜகவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து, மேலும் பல தலைவர்களின் பெயர்கள் பொதுவேட்பாளருக்கு அடிபட்டன.

இது தொடர்பாக கடந்த 15ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த கூட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்து விட்டார். இது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.

farooq_abdullah_detained_updatenews360

பாஜகவை எதிர்த்து போட்டியிட இருகட்சிகளின் முக்கிய தலைவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு யாரை நிறுத்தலாம்..? என்று வரும் 21 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!