அந்த 3 மாவட்டங்களில் நீடிக்கும் ரெட் அலர்ட்… வடமாவட்டங்களை குறி வைத்த கனமழை ; வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
18 December 2023, 4:08 pm

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை , தென்காசி , குமரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேசியதாவது ;- அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கனமழை குறித்து எச்சரிக்கை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது. மேலும், விருதுநகர், தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓர் இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் 40 முதல் 42 காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர். இது ஐந்து சதவீதம் இயல்பை விட அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும் 33 இடங்களில் மிக கனமழையும் 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது, எனக் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 556

    0

    0