தர்மபுரி மாவட்டம், A.பள்ளிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால், வயது 86 இவர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று தனது அப்பா எல்லப்பன் பெயரில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை தனது மகன் ராமஜெயம் என்பவரின் பெயரில் மாற்றம் செய்ய பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், நிலத்தை பத்திரப்பதிவு சென்றபோது, நிலத்தின் அனுபவ சான்றிதழில் அரசின் கோபுர சீல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணனின் கையெழுத்து இருந்துள்ளது ,
இந்த சான்றிதழ் சம்பந்தமாக பத்திர பதிவு அலுவலர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனை ஆய்வு செய்த தாசில்தார் தான் இந்த சான்றிதழில் கையொப்பம் இடவில்லை எனவும் அரசின் கோபுர சீலை போலியாக தயாரித்து போலியாக கையொப்பமிட்டு, பத்திரப்பதிவு செய்ய முற்பட்டுள்ளதும் தெரியவர
கோபால் மீது நடவடிக்கை எடுக்க,கோரி A.பள்ளிப்பட்டி போலீசில் தாசில்தார் சரவணன் புகார் செய்துள்ளார்.
அதன் படி போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் கோபாலின் மகன் ராமஜெயம் பத்திரபதிவு செய்ய அரசு பதிவு பெறாத எழுத்தர் சந்திரனை அனுகி உள்ளார்.அப்போது இந்த பத்திரம் பதிவு செய்ய அனுபவச் சான்றிதழ் வேண்டும் அது இருந்தால் தான் உன் பெயருக்கு மாற்ற முடியும் என கூறி அந்த சான்றிதழை நானே வாங்கி தருகிறேன் என பேசி ராமஜெயத்திடமிரூந்து 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் எழுத்தர் சந்திரன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் இடைத்தராக வேலை பார்த்துவந்த அருள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்த சந்திரசேகரன் இவர்கள் மூவரும் கூட்டாக சேர்ந்து அரசு கோபுர முத்திரையை போலியாக தயார் செய்து பத்திரத்தில் போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோபாலின் மகன் ராமஜெயம் வயது 54,
அருள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய மூவரையும் A.பள்ளிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட எழுத்தர் சந்திரனை வலை வீசித் தேடி வருகின்றனர்.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.