திமுக அமைச்சர்கள் மேலும் 3 பேர் சிறைக்கு செல்வது உறுதி : கிருஷ்ணகிரியில் அண்ணாமலை பரபர!!
Author: Udayachandran RadhaKrishnan10 ஜனவரி 2024, 10:04 மணி
திமுக அமைச்சர்கள் மேலும் 3 பேர் சிறைக்கு செல்வது உறுதி : கிருஷ்ணகிரியில் அண்ணாமலை பரபர!!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சங்க காலத்திலிருந்து இன்று வரை சிறப்பு பெற்றுள்ள பகுதி. இப்பகுதியை சேர, சோழ மன்னர்கள் ஆண்டுள்ளனர். பல வீரர்களுக்கு நடுகல் உள்ள பகுதி. இங்கு, 800 ஆண்டு பழமை வாய்ந்த மாதேஸ்வரன் மலை உள்ளது. குட்டி சூரத் என அழைக்கப்படும் பர்கூரில், 2 ஆயிரம் ஜவுளி கடைகள் உள்ளன.
ஒரு எம்.எல்.ஏ.,வை முதல்வராக்கியதும், முதல்வரை தோற்கடித்ததும் பர்கூர் சட்டசபை தொகுதி. 146 வது சட்டசபை தொகுதியாக இன்று என் மண் என் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறோம்.
வரும் லோக்சபா தேர்தலில் பர்கூரில் மோடி அலை என்பதை உங்கள் முகங்களில் பார்க்கிறேன். தமிழக அரசியலில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த, 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கடந்த, 9 ஆண்டுகளில் மோடி உள்பட, 76 அமைச்சர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.
ஆனால் தமிழகத்தில், 35 அமைச்சர்கள் உள்ளனர். இதில், 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு உள்ளது. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, காலக்கெடுக்குள் தப்பிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவரது அமைச்சர், எம்.எல்.ஏ., பதவியும் போயுள்ளது. விரைவில் அவர் சிறை செல்வார்.கடந்த, 6 மாதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை.
சிறையிலிருந்து செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சம்பளம் வாங்குகிறார். அடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் மற்றொரு ஊழல் வழக்கில் பொன்முடி என மூன்று அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி என கூறியுள்ளார்.
0
0