அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : எப்போது முதல் அமல் தெரியுமா? சுதந்திர தினத்தில் முதலமைச்சரின் அடுத்தடுத்த அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2022, 10:18 am
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். சென்னை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 2-வது ஆண்டாக தேசியக்கொடியை ஏற்றினார்.
பின்னர் உரையாற்றிய அவர், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியருக்கு இணையான அகவிலைப்படி மாநில ஊழியர்களுக்கு உயர்த்தப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.