விஷவாயு தாக்கிய 3 தொழிலாளர்கள் பலி… கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 6:07 pm

கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டில் புதிய கழிவு நீர் தொட்டியில் கட்டுமான பணி முடிந்து சவுக்கு மரங்களை பிரிப்பதற்காக இறங்கிய சென்ட்ரிங் தொழிலாளர் மோகன்ராஜ் மற்றும் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் இறங்கினனர்.

அப்போது விஷ வாயு தாக்கி மயக்கமுற்று, அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த சிவா என்பவர் இருவரையும் காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது, அவரையும் விஷவாயு தாக்கியது.

தற்போது மூன்று பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 529

    0

    0