டெல்லியை ஆளும் 3வது பெண் முதலமைச்சர்.. அதிஷி பெயரை முன்மொழிந்த கெஜ்ரிவால்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 12:35 pm

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அவர் விடுதலையான பின், 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார்.

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார். அவர் இன்று மாலை கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.

மேலும் படிக்க: கஞ்சா நகரமாக மாறுகிறதா கோவை? 8 மாதங்களில் 300 கிலோ.. இதுவரை 20 பேர் கைது : தீவிர சோதனையில் போலீஸ்!

இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதனால் அதிஷி அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!