சித்தா பட பாணியில் சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் வடைமாலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமையை கொலை செய்து உடலை புதைத்துவிட்டான்.
இதை அறியாத சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாக்லேட் கொடுத்து அந்த சிறுமியை சுசாந்த் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்த நிலையில் அது பற்றி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சுசாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்து தீவிர விசாரணை நடத்திய போது அவன் சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்திச் சென்று வனப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டான்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்து சேர்ந்த புத்தூர் போலீசார் சுசாந்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.