தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 400 எம்பிக்கள்…. ராமேஸ்வரத்தில் அண்ணாமலை சூளுரை!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 8:41 pm

“என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார் .

இந்த நடைபயண தொடக்க விழா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. தொடக்க விழாவில் பேசிய அண்ணாமலை , கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுவாமி விவேகானனந்தர் நடைபயணமாக வந்தார். இந்த யாத்திரை என்பது பாஜகவின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை.

தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை .என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.

மோடியின் முகவரி என்பது பிரதமர் அலுவலகம் அல்ல. அவருடைய ஆட்சியில் திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் முகவரி தான் பிரதமரின் முகவரி.

இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன. உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கின்றன.2024ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார்.

பிரதமர் மோடி ஒரு சாமானியர். சாமானியரின் ஆட்சி இந்தியாவில் நடந்து வருகிறது. 2024 ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் 400 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்வார்கள்.என கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 361

    0

    0