சோகத்தில் முடிந்த ஜாலி பயணம்: 5 கல்லூரி மாணவர்கள் உயிரை காவு வாங்கிய கொடூர விபத்து…..!!

Author: Sudha
12 August 2024, 9:42 am

திருத்தணி அடுத்துள்ள கனகம்மாசத்திரம் என்ற பகுதியின் அருகே ராமஞ்சேரி கிராமம் அருகே லாரியும் – காரும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதியதில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது.

இந்த கொடூர விபத்தில் 5 SRM கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர் புறம் கார் ஒன்று வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!