EXIT POLL பற்றி கவலையே இல்ல… 5 மாநிலத்தில் பாஜக எங்குமே ஆட்சியை பிடிக்காது : காங்கிரஸ் நம்பிக்கை!!
Author: Babu Lakshmanan30 November 2023, 5:11 pm
5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது என்று ராஜஸ்தான் முதலமச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அடித்துக் கூறினார்.