உத்தபிரதேசத்தில் மீண்டும் பறக்கும் காவி கொடி… பஞ்சாப்பில் முதல்முறையாக ஆம்ஆத்மி… எஞ்சிய 3 மாநிலங்களில் யாருடைய ஆட்சி தெரியுமா..?
Author: Babu Lakshmanan7 March 2022, 7:49 pm
உத்தரபிரதேசம், பஞ்சாப் ள்உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் இன்று மார்ச் 7 ந்தேதி) வரை சட்டப்பேரவை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர சட்டசபைக்கு சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும், 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாப்பை தவிர எஞ்சிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது. அதே நேரத்தில் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் பஞ்சாப்பில் ஆட்சியை இழப்பது தெரிய வருகிறது. அங்கு முதல் முறையாக, ஆம்ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் சொல்லுகின்றன. ஆம் ஆத்மி கட்சி 76-90 இடங்களை கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் இதோ
உத்தரபிரதேசம்:-
பாஜக + : 262 – 277
சமாஜ்வாதி கட்சி : 119 – 134
பகுஜன் சமாஜ் : 7 – 15
காங்கிரஸ் : 3 – 8
உத்தரகாண்ட் (ரிபப்ளிக் டிவி)
காங்கிரஸ்: 33-38
பாஜக: 29-34
பகுஜன் சமாஜ் 1-3
பிற கட்சிகள் 1-3
உத்தரகாண்ட்
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
பாஜக : 37
காங்கிரஸ் : 31
ஆம் ஆத்மி : 1
மற்றவை : 1
ஏபிபி சி வோட்டர்
பாஜக : 26 – 32
காங்கிரஸ் : 32 – 38
ஆம் ஆத்மி : 2
மற்றவை : 3 – 7
மணிப்பூர் – இந்தியா டுடே
பாஜக : 23 – 28
காங்கிரஸ் : 10 – 14
பஞ்சாப் – இந்தியா டுடே
பாஜக : 1 – 4
காங்கிரஸ் : 19 – 31
ஆம்ஆத்மி : 76 – 90
அகாலிதளம் : 7 – 11