வெறிநாய்கள் கடித்து குதறி 5 வயது சிறுவன் பலி : மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 1:19 pm

ஹைதராபாத்தை சேர்ந்த கங்காதர் என்பவர் பிழைப்பு தேடி மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிஜாமாபாத் வந்தார்.

நிஜாமாபாத்தில் கார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் அவர் வாட்ச்மேன் ஆக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தான் வேலை செய்யும் கார் சர்வீஸ் சென்டரை தன்னுடைய ஐந்து வயது மகன் பிரதீப்புக்கு காண்பிப்பதற்காக அவனை அங்கு அழைத்து சென்றார்.

அப்போது பணியில் வேறு ஒருவர் வாட்ச்மேன் வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு பேரும் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் பிரதீப் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வெறிபிடித்த தெரு நாய்கள் சிறுவனை சூழ்ந்து குறைக்க துவங்கின.

நாய்களிடமிருந்து தப்புவதற்காக ஓடிய சிறுவன் கீழே விழுந்தான்.
அவனை கடித்து குதறிய தெரு நாய்கள் தரதரவென்று இழுத்து சென்றன.

இந்த நிலையில் சிறுவனின் சப்தம் கேட்டு கங்காதர் வந்து பார்த்தபோது அவன் ரத்த வெள்ளத்தில் நாய்களுக்கு இரையாகிக் கொண்டிருப்பதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நாய்களை விரட்டி விட்ட கங்காதர் உடனடியாக அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டான் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் நிஜமாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இது தொடர்பான தகவல்கள் சற்று தாமதமாக இன்று வெளியாகி உள்ளன. நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 426

    0

    0