மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 11:05 pm

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நாள் கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 1 லட்சம் பேருக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2000 சூரிய சக்தி பூங்கா நிறுவப்படும்.

அதுமட்டுமில்லாமல் 166 கோடி உயர்மின் மாற்றிகள் அமைக்கப்படும். தமிழகத்தில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் போதிய வசதிகள் செய்யப்படும், எனக் கூறினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!