அம்பானி வீட்டு விழாவில் கை துடைக்க டிஷ்யூ-க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளா..? வைரலாகும் புகைப்படம்.. வெளியான உண்மை!!
Author: Babu Lakshmanan4 April 2023, 5:59 pm
அம்பானி வீட்டு விழாவில் டிஷ்யூ-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா..? என்ற கேள்வியும், விவாதமும் எழுந்துள்ளது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த முகேஷ் அம்பானி. பிரம்மிக்க வைக்கும் வீடு, கார் என்று அனைத்திலும் புருவத்தை உயர்த்த வைக்கும் இவரது வீட்டு விசேஷங்களும், எப்போதும் மிகவும் ஆடம்பரமாகவே இருக்கும்.
அதேபோல, அவரது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி தலைசுற்ற வைத்தது. ஏனென்றால், அம்பானி வீட்டில் வேலை செய்யும் ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, அண்மையில் நடத்திய கலாசார மைய திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பேசுபொருளானது.
அதாவது, மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட பல்துறை கலாச்சார மையம் திறப்பு விழா தொடர்பான ஒரு பார்ட்டியில் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தியதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்தன. அந்த புகைப்படம் உண்மையா? என்பது குறித்த விவாதங்களும் நடைபெற்று வந்தது.
இதனிடையே, அதுபற்றி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அந்த தட்டில் இருந்த இனிப்பு விலை உயர்ந்தது என்றும், ஆனால், அருகே இருந்த 500 ரூபாய் நோட்டு போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டின் தோற்றத்தை உயர்த்த போலி பணம் அலங்காரமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறினாலும், அம்பானி வீட்டு விஷேங்களில் உண்மையான ரூ.500 நோட்டு வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.