நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 5:44 pm

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. படிப்படியாக வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 381

    0

    0