சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் சவுக்கடி : 6 மாதம் சிறை தண்டனையுடன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு… !!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 5:58 pm
நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சங்கு சங்கர் பேசி இருந்த நிலையில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று அவருக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது சவுக்கு சங்கர் அதில் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் சவுக்கு சங்கை போலீசார் சுற்றி வளைத்தனர், அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது சவுக்கு சங்கருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.