காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 6 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்.. பாஜக மீது எழும் சந்தேகம் : மொத்தமும் காலி!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2024, 2:23 pm
காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 6 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்.. பாஜக மீது எழும் சந்தேகம் : மொத்தமும் காலி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவாண் அண்மையில் பாஜகவுக்கு தப்பி ஓடினார். அவருக்கு தற்போது ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்துவிட்டது பாஜக. அசோக் சவாணுடன் மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் இந்த 6 பேரும் அசோக் சவான் பாணியில் பாஜகவுக்கு தாவக் கூடுமோ என்கிற பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் அசோக் சவாண் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தாம் எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் கூட்டிச் செல்லவில்லை என்கிறார் அசோக் சவாண்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது பாஜக. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணி, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி என பிரிந்தது.
அதே போல சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்தது. சரத்பவாரின் மருமகனான அஜித் பவார் தனியாக பிரிந்து ஏக்நாத் ஷிண்டேவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வருகிறார். இந்த வலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவாணையும் பாஜக தட்டி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.