தமிழகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை… விவசாயிகளின் அழுகைக்கு CM ஸ்டாலின் பதில் சொல்லியே ஆகனும் ; அறப்போர் இயக்கம்..!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 2:01 pm

விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இது வரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை என்று விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து அறப்போர் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட கிராமங்களில், சிப்காட் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் சுமார் 3,600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அரசின் இந்தப் பணிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கோட்டாட்சியரை சந்தித்து முறையிட, பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த போலீசார், கடந்த 4ம் தேதி நள்ளிரவில் சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து வேலூர், புழல், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர்.

இதனிடையே, போராட்டக் குழு பிரதிநிதிகளான பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இதுவரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை அரசுக்கு தர மறுத்து போராடிய விவசாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியாத திமுக அரசு அவர்களை இரவு தூங்கும் போது வீடு புகுந்து கைது செய்து தனித்தனி சிறைகளில் அடைத்து தற்பொழுது குண்டர் சட்டத்தையும் அவர்கள் மீது போட்டுள்ளது.

விவசாயிகள் மீது எந்த அரசாங்கமும் இது வரை இப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தமிழகத்தில் நடத்தியதில்லை. இந்த விவசாய மக்களின் அழுகைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!