திருச்சியில் 8 ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 11:04 am

திருச்சியில் ரயில் சேவை முற்றிலும் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் 8 ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் முன்பதிவல்லா விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக புறப்படும். சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி