அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை… 9 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அலர்ட்..!!
Author: Babu Lakshmanan15 November 2023, 8:47 am
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.