தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். ஜேசிபி ஆப்ரேட்டர் . இவருடைய மகன் மதியரசு (வயது 6).
இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றான். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பதாக நேற்று தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது கை கால் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததும் சிறுவனை மர்மநபர்கள் கொலை செய்து உடலை பயன்பாடு இல்லா மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் வீசி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ் வயது (18) ,மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் சிறுவன் மதியரசுவிடம் ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சிறுவனின் கை கால்கள் மற்றும் வாய் பகுதியை கட்டி சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்
அப்போது இது குறித்து சிறுவன் வெளியில் சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் சிறுவனை கழுத்தை நெரித்து கொன்று தொட்டியில் வீசி உள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் கைது செய்யப்பட்ட நிலையில்
கொலைக்கான காரணம் குறித்தும் ,கொலையுடன் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா எனவும் இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய பகுதியில் திருப்பத்தூர் தருமபுரி செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுவருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
This website uses cookies.