கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய மாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயமூர்த்தி. இவரது மகன் வினோத் விஜயமாநகரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகே சென்றபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். பின்னர் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் வினோத் உடலை பார்த்து கதறி அழுதனர்.
உளூந்தூர்பேட்டை முதல் விருதாச்சலம் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக விஜயமாநகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது.
அதற்காகதான் அந்த பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், மழைநீரில் பள்ளம் தெரியாத வகையில் இருந்ததால், சிறுவன் வினோத் அதில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
அதே மாதத்தில் திண்டுக்கல் மாவட்டம் கம்மாளப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து லத்தீஷ், சர்வின் என்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக தற்போது வினோத் என்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களை முறையாக தடுப்புகள் வைத்து அடைத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கூடுதல் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் ஒப்பந்ததார்களை பணிசெய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என்பதோடு, பள்ளம் தோண்டப்படும் இடங்களை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.