வீட்டுக்கு அழைத்து வந்து காபியில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்… வீடியோவை காட்டி நகை, பணம் பறித்த பிரபல நடிகர்!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2023, 6:51 pm
வீட்டுக்கு அழைத்த வந்து காபியில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்… வீடியோவை காட்டி நகை, பணம் பறித்த பிரபல நடிகர்!!
2011 ஆம் ஆண்டு ஸ்வயம் க்ரிஷி என்ற படத்தில் நடித்துள்ளார் வீரேந்திர பாபு. இதன் மூலம் இவருக்கு 36 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் பழக்கம் கிடைத்தது.
அவர் சிக்மக்ளூரை சேர்ந்தவர். அவருடன் வீரேந்திர பாபு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் தனது வீட்டிற்கு வரழைத்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் தன் வீட்டிற்கு வந்ததால் காபி குடிக்காமல் செல்லக் கூடாது என கூறியுள்ளார். இதையடுத்து காபி குடித்த அந்த பெண் மயங்கியுள்ளார்.
இந்த மயக்க நிலையில் அந்த பெண்ணை வீரேந்திர பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பாலியல் பலாத்காரத்தை வீரேந்திர பாபு செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணை ஒரு முறை தொடர்பு கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் செல்போனுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணுக்கு அப்போதுதான் காபியில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீடியோவை ஆன்லைனில் விட்டுவிடுவதாக மிரட்டி மிரட்டியே அவரை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி பணத்தை கறந்துள்ளார்.
ரூ 15 லட்சம் வரை வீரந்திர பாபு பணம் பறித்தது தெரியவந்தது. பின்னர் கடந்த ஜூலை 30 ஆம் ஆண்டு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வீரேந்திர பாபு, அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
வழியில் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவரை சாலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக அந்த பெண்ணை சித்ரவதை செய்து வந்த நிலையில் வீரேந்திர பாபுவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பென் டிரைவ், செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் சீட் வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளையும் போலி வேட்பாளர் பட்டியலையும் கொடுத்ததாகவும் அதன் மூலம் 1.8 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் வீரேந்திர பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.