பிரபல தியேட்டரில் ஆசை ஆசையாய் வாங்கிய கூல்ட்ரிங்ஸ்: ஆனால் உள்ளே கிடந்ததோ: கொந்தளித்த இளைஞர்….!!
Author: Sudha19 August 2024, 11:15 am
சென்னை வடபழனியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் இடைவேளையி்ன் போது டின்னில் அடைக்கப்பட்ட கோல்ட் காஃபி ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். அதனுள் கருப்பாக ஏதோ ஒன்று தட்டுப்படவே அது என்ன என்று ஒரு கப்பில் ஊற்றி சோதனை செய்துள்ளார். அதற்குள் ஒரு ஈ இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து புகார் அளிக்க உணவுப் பாதுகாப்பு துறைக்கு அழைத்ததாகவும் அவர்கள் போனை எடுக்காததால் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் யாரேனும் வாங்கி அருந்தியிருந்தால் அப்படியே பூச்சியுடன் விழுங்கி இருக்கவும் வாய்ப்புண்டு என்று கூறிய அவர் குழந்தைகள் கர்ப்பிணிகள் இனியும் இதை வாங்கி அருந்தக்கூடும் என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.