போராடியும் பாத்தாச்சு.. மனு கொடுத்தும் பாத்தாச்சு.. என் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கல : விரக்தியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தந்தை!!

Author: Babu Lakshmanan
11 October 2022, 4:42 pm

காஞ்சிபுரம் ; தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என பல தரப்பட்ட அரசு அலுவலகத்தில் முயற்சித்தும், கடைசி வரை அவருடைய மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க இயலவில்லை.

ஜாதி சான்றிதழ் வாங்க முடியாத காரணத்தினால், மனம் வெறுத்துபோய் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீ வைத்துக் கொண்டதில் அவருடைய துணிமணி எல்லாம் எரிந்து உடல் வெந்து போன நிலையில் வேல்முருகன் 60 சதவீத படுகாயத்துடன் மீட்க்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேல்முருகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?