திருப்பதி: சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவியின் உடலை ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு தோளில் சுமந்து நடந்து சென்று கொண்டிருந்த நபருக்கு போலீசார் உதவிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் சரோடா கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சாமுலு. அவருடைய மனைவி இடுகுரு(30). உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மனைவிக்கு ஒடிசா மாநிலத்தில் தேவையான சிகிச்சையை சாமுலுவால் அளிக்க இயலவில்லை.
எனவே, மனைவியை அழைத்து கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வந்த சாமுலு, அவரை அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு இடுகுரு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே, மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாத மனைவி அழைத்து கொண்டு பேருந்தில் செல்ல இயலாது என்பதால், மனைவியுடன் அவர் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் சென்று கொண்டிருந்தார். விஜயநகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இடுகுரு மரணம் அடைந்து விட்டார்.
எனவே, ஆட்டோ ஓட்டுநர் நடுவழியில் மனைவி உடலுடன் சாமுலுவை இறக்கி விட்டு சென்று விட்டார். மொழி தெரியாத ஊரில், தெரிந்தவர்கள், நண்பர்கள் இல்லாத சூழலில் ஆம்புலன்ஸை வாடகைக்கு அமர்த்த தேவையான பணமும் இல்லாமல் தவித்த சாமுலு, மனைவி உடலை தோளில் சுமந்து ஒடிசா மாநிலத்தை நோக்கி சாலையில் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் என்ன நடந்தது என்று விசாரித்து ஒடிசாவில் உள்ள சாமுலுவின் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அதன் பின் ஆம்புலஸ் மூலம் சாமுலுவுஙன மனைவி உடலை அவருடைய சொந்த ஊர் வரை போலீசார் கட்டணம் ஏதும் இன்றி அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.