ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத்தொடரா? 2024 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது? தமிழக அரசு திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2023, 11:15 am

ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத்தொடரா? 2024 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது? தமிழக அரசு திட்டம்!!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதால் ஜனவரி 2வது வாரத்தில் கூட்டத்தொடரை தொடங்கலாமா அல்லது பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கலாமா என ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.

ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். தற்போதுள்ள சூழலில், மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்தார்.

கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு விஷயங்களில் ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இதனையடுத்து ஆண்டு முதல் கூட்டத்தை ஆளுநரை அழைத்து நடத்தலாமா அல்லது அவரை அழைக்காமலேயே கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 272

    0

    0