அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. தமிழக காவல்துறைக்கும் புதிய சிக்கல்!!!
Author: Udayachandran RadhaKrishnan7 September 2023, 9:14 pm
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. தமிழக காவல்துறைக்கும் புதிய சிக்கல்!!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான வினீத் ஜிண்டால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும் வெறுப்பு பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதியாத சென்னை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக வினித் ஜிண்டால் டெல்லி போலீசில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்திருந்தார். இந்து மக்களின் மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.