பேனா நினைவுச் சின்னம் வேணாம்… அனுமதி தரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2023, 7:02 pm

முன்னாள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமாக இருந்தவர் கருணாநிதி. இவருக்குச் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் வெளியிட்டார். மெரினாவில் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது 39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்… கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் மரங்களை நட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மீனவ அமைப்பும் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இது குறித்து தமிழக அரசு சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!