டிடிஎப் வாசனுக்கு புது சிக்கல்… தமிழகத்தை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 4:35 pm

திருப்பதி மலைக்கு வந்திருந்த யூடியுபர் டிடிஎஃப் வாசன் சாமி கும்பிட செல்லும்போது பிராக் வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் டி டி எப் வாசன் சாமி கும்பிட சென்ற நாளன்று சாமி தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் மீது புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது (வழக்கு எண் 72/2024) செக்சன் 299 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்..

மேலும் படிக்க: காலை உணவுத் திட்டத்தை நாங்க தான் கண்டுபிடிச்சோம் என திமுக சொல்வது வேடிக்கை ; அண்ணாமலை விமர்சனம்!

எனவே அவருடைய வக்கீல்கள் திருப்பதி மலைக்கு வந்து கொண்டிருப்பதாக திருமலை போலிசார் தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 259

    0

    0