செல்போனில் 800 பெண்களின் அந்தரங்கம்: நடிகையின் EX காதலன் செய்த லீலைகள்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

Author: Sudha
16 August 2024, 11:01 am

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குண்டூரைச் சேர்ந்த மூவரை டெல்லியில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தது.மஸ்தான் சாகிப் என தெரியவந்தது. கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த மஸ்தானை குண்டூரில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில் அவரை பற்றி பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்த மஸ்தான் சாகிப்புக்கு சம்பளமே லட்ச கணக்கில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் பார்ட்டி.. பப்.. என சுற்ற ஒரு கட்டத்தில் போதை பொருள் கும்பலுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது..

இந்த சகவாசத்தால் ஈர்க்கப்பட்ட மஸ்தான்… நாளடைவில் போதை பொருளை கடத்தவும் ஆரம்பித்து இருக்கிறார்…

ஒரு கட்டத்தில் கூட்டாளிகள் சிக்கியதை அறிந்த மஸ்தான், கடந்து இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த நிலையில்…. குண்டூரில் வைத்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 30 கிராம் போதை பொருளையும் பறிமுதல் செய்தனர்..

இதனிடையே தெலுங்கு நடிகர் ராஜ் தருணும், நடிகை லாவண்யாவும் 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்த விவகாரத்தில் தருண் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக லாவண்யா அளித்த புகாரில் தருண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது..

ஆனால் தருணுக்கு முன்பாக மஸ்தானை லாவண்யா காதலித்ததாகக் கூறப்படும் நிலையில்.. மஸ்தான் ஏமாற்றியதாக லாவண்யா அளித்த புகாரில் மஸ்தான் விசாரணைக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மஸ்தானை கைது செய்த போலீசார் அவரது செல்போனை சோதனை செய்த போது… அதில் கல்லூரி மாணவிகளில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பெண்களின் ஆபாச புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

மஸ்தான் மேற்கண்ட பெண்களுக்குப் போதை பொருள் கொடுத்து அடிமையாக்கி அதன் பின்பாக அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் தெலுங்கு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!