‘வழியில இப்படியா படுத்து கிடப்ப’… சாலையில் படுத்திருந்த மலைப்பாம்பை நெருங்கிச் சென்ற நபர்… காத்திருந்த அதிர்ச்சி ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 1:17 pm

சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, வனங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் மனித – விலங்கு மோதல் அதிகமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், விலங்குகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய மனிதர்களே, அதனை சித்ரவதைப்படுத்துவதும், கொன்று எறிவதும் அடிக்கடி வலைதளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படியிருக்கையில், தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது எங்கு நடந்தது..? எப்போது நடந்தது..? என்று தெரியாத நிலையில், வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே கொதிப்படைய செய்துள்ளது.

சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசுகிறார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இவ்வளவு அலட்சியமா..? என திட்டித் தீர்த்தாலும், ஒரு சிலரோ, வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அவர் இதை செய்திருக்கலாம் என்று ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 499

    0

    0