கைதில் இருந்து தப்பிக்க திமுக பிரமுகர் அரங்கேற்றிய நாடகம் : வெளிச்சம் போட்டு காட்டிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 9:25 pm

திமுக பிரமுகர் கைதில் இருந்து தப்பிக்க வைக்க தானும் கள்ளச்சாராயம் உட் கொண்டதாக கூறி மருத்துவமனையில் நாடகம் அரங்கேறியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார்.

கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை.
அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு என பதிவிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ