அவதூறு பரப்பும் வகையில் வாசகம் சித்தரித்து போஸ்டர் : பாஜக முக்கிய நிர்வாகி திடீர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2022, 7:46 pm
வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதன் என்பவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
இதனையடுத்து அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், வண்ணார்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ், இந்து ஜனநாயக முன்னணி சென்னை மாநகர செயலாளர் சத்யநாதன், சிவகுருநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதில் சிவகுருநாதன் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் 5 ஆயிரம் போஸ்டர்களை சிவகாசியில் அச்சடித்து அவற்றை வழங்கறிஞர்கள் இருவரின் உதவியோடு, சத்யநாதன், பிலிப்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி வைத்து சென்னையில் ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.